மகாராஷ்டிராவில் ஐபோன் வாங்கிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குடும்பமே உயிரிழந்த சோகம் மறைவதற்குள், உத்ரபிரதேசத்தில் சிறு தொகைக்காக நடந்த மற்றொரு பெரும் சோகம் ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பதோஹி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமாரி தேவி, சுகாதாரத்துறையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வரும் இவரின் கணவர் ராம்சாகர் ராஜ்பார் ஆவார். இவர்களின் மகன் தனக்குச் செலவுக்காக வெறும் 100 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், தாயாரிடம் அந்தத் தருணத்தில் பணம் இல்லாததால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் கடும் மனவேதனை அடைந்த அந்தச் சிறுவன், திடீரென அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தை நோக்கி ஆவேசமாக ஓடியுள்ளான். தன்னைக் காப்பாற்ற முயன்ற தாயின் பாசத்திற்கு முன் வேறு எதுவும் பெரிதாகத் தெரியாது என்பார்கள். அதற்கேற்ப, தன் மகனை ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தாய் சிவகுமாரி தேவி அவசரமாகப் பின்னாடியே ஓடிச் சென்றார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக அங்கு வந்த ரயில் அவர்மீது மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிறுவன் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.
अभी कल महाराष्ट्र के छत्रपति संभाजीनगर से दर्दनाक खबर आई थी – 19 साल के बेटे की iPhone जिद के बाद परिवार के तीन लोगों की जान चली गई।
आज उत्तर प्रदेश के भदोही में बेटे ने मां से सिर्फ ₹100 मांगे। उस वक्त मां के पास पैसे नहीं थे, इसलिए मना कर दिया। नाराज होकर बेटा रेलवे ट्रैक की… pic.twitter.com/2LINNoXRuI
— Mandeep RajBhar (@MandeepRajBhar9) August 22, 2026
“>
சிறிய பணத் தேவைகளுக்காகவும் பிடிவாதங்களுக்காகவும் பிள்ளைகள் எடுக்கும் அவசர முடிவுகள் எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.
