தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கிய நிலையில் அமைச்சர் விஜய் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தேர்தல் வாக்குறுதிகளாக கூறியபடி வரும் பொங்கல் பண்டிகை முதல் அதாவது ஜனவரி 2027 முதல் அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய திட்டம் தமிழக வெற்றிக்கழக அரசால் கைவிடப்படுகிறது என்றும் மற்றொரு அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டார். கடந்த ஆட்சிக்காலங்களில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை எதிர்த்து மக்கள் பல மாதங்களாக போராடினார்கள். அப்போதே தமிழக வெற்றி கழகம் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டம் கைவிடப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் தற்போது முதல்வர் விஜய் சொன்ன வாக்கை காப்பாற்றி பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார்.
