கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனுஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தனுஷை கைது செய்தனர்.