தமிழகத்தில் போட்டி தேர்வுகளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தமிழ் மொழி தேர்வு சமீபத்தில் கட்டாயமாகப்பட்டது. இந்நிலையில் போட்டி தேர்வுகளுக்கான தமிழக அரசின் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி, SSC, IPPS, RRPபோட்டி தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் www.civilservicecoaching.comஎன்ற அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய இணையதளத்தில் இன்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.