“எங்க தலைவர் கொளத்தூர்ல வெறும் அஞ்சு நிமிஷம்தான் சார் பேசினாரு, அதுக்கே உங்க 75 வருஷக் கட்சி 59 தொகுதிக்கு வந்து சுருண்டுடுச்சு !” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அவர்கள் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை அக்குவேறாகப் பிரித்து மேய்ந்து ஆக்ரோஷமாகப் பேசினார்.
எப்பொழுது, எங்கே, எப்படிப் பேச வேண்டும் என்பது தங்களது முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று குறிப்பிட்ட அவர், வெறும் ஐந்து நிமிடப் பேச்சுக்கே திமுகவின் ஒட்டுமொத்தக் கோட்டையும் உலுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் அவர்களின் பலம் 59 தொகுதிகளாகக் குறைந்துவிட்டது என மிகக் கடுமையான சாடினார்.
மேலும், தவெக தலைவர் மீண்டும் ஒருமுறை மேடையேறிப் பேசத் தொடங்கினால், தற்போது அசைக்க முடியாத சக்தியாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் திமுகவின் வாக்கு வங்கியும் தொகுதிகளும் அடுத்த தேர்தலில் அடியோடு ‘ஜீரோ’ ஆகிவிடும் என்று ஆதவ் அர்ஜுனா மிக ஆவேசமாகச் சவால் விடுத்துள்ளதால், அறிவாலய வட்டாரத்திலும் தவெக தொண்டர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
