இந்தியாவின் கிராமப்புறங்களில் குழந்தைகள் மரத்தில் ஏறி மாம்பழங்களை ரசித்துச் சாப்பிடுவது வழக்கம், ஆனால் சிங்கப்பூரில் பொது இடங்களில் உள்ள மரங்களில் இருந்து பழங்களைப் பறிப்பது அல்லது கீழே விழுந்த பழங்களை எடுப்பது கூட சட்டப்படி குற்றமாகும்.

இப்படிச் செய்தால், சுமார் 3.6 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று பிரியங்கா சின்ஹா என்ற பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பூங்கா வாரியம் பொது இடங்களில் உள்ள மரங்களையும் அதன் பலன்களையும் அரசாங்கத்தின் சொத்தாகக் கருதுவதால், அரசு அனுமதி இன்றி பழங்களை எடுப்பது சட்டவிரோதமானது என அந்நாட்டின் சட்டங்கள் கூறுகின்றன.

சிங்கப்பூரின் இந்தச் கடுமையான விதிகள் குறித்துப் பலரும் வியப்புடனும், சில வேடிக்கையான எதிர்வினைகளையும் தெரிவித்து வருகின்றனர். அரசு நிலம் அல்லது தேசிய பூங்காக்களில் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் மட்டுமின்றி, ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வாய்ப்புள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sinha (@ppriyankasinha)

“>

சிங்கப்பூரின் ஒழுக்கமான பொது வாழ்க்கை முறைக்கு இது போன்ற கடுமையான சட்டங்களே காரணம் என்று கூறப்பட்டாலும், பழங்கள் மரத்திலேயே வீணாகக் கிடப்பது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் கருத்துக்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.