தெருவோரம் பசியால் தவிக்கும் வாய் பேசாத ஜீவன்களுக்காக, முதியவர் ஒருவர் இரவு நேரத்தில் தள்ளுவண்டியுடன் சென்று ரொட்டிகளைச் சேகரித்து மாடுகளுக்கு ஊட்டும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி லட்சக்கணக்கான இதயங்களை வென்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்குள்ளேயே உதவி செய்து கொள்வது அரிதாகி வரும் வேளையில், இந்த மனிதர் தெருவில் சுற்றும் ஆதரவற்ற பசு மாடுகள் இரவில் பசியோடு தூங்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
அவர் இரவு நேரத்தில் ஒரு தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வீதி வீதியாகச் சென்று, மாடுகளுக்காக அன்போடு ரொட்டிகளைச் சேகரிக்கிறார். மக்கள் வழங்கும் ரொட்டிகளை அந்த தள்ளுவண்டியில் சேர்த்துக் கொண்டு, தெருவில் பசியோடு அலைந்து திரியும் பசுக்களுக்குத் தேடித் தேடிப் பாசத்தோடு ஊட்டி மகிழ்கிறார்.
Pure Compassion !!
This man walks door to door collecting rotis so that no cow in the village sleeps hungry 🥹👏👏 May God Bless Him…. pic.twitter.com/kLrPkmnlWr
— SriSathya (@sathyashrii) June 18, 2026
வாய் பேச முடியாத விலங்கினங்கள் மீது இந்த மனிதர் காட்டும் உன்னதமான மற்றும் தூய்மையான அன்பு குறித்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருவதுடன், “இவரைப் போன்ற நல்ல மனிதர்களால் தான் இந்த பூமியில் இன்னும் மனிதாபிமானம் வாழ்கிறது” என நெட்டிசன்கள் மனதார வாழ்த்திப் பாராட்டி வருகின்றனர்.
