பரபரப்பான ஒரு மார்க்கெட் பகுதியில் நிலவிய கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காமுகன் ஒருவனை, இளைஞர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்து நடுரோட்டில் வைத்து வளுத்து வாங்கிய நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திய நபர் ஒருவர், அங்கு சென்ற பெண் ஒருவருக்குத் தெரியாமல் அவரிடம் தவறான முறையில் தொட்டு அநாகரிகமாகச் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை அந்தப் பெண்ணின் பின்னாலிருந்து கவனித்த மற்றொரு நபர், சத்தம்போடாமல் தனது மொபைல் போன் மூலம் அந்த காமுகனின் அசிங்கமான செயலை ரகசியமாக வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். ஆதாரம் சிக்கிய அடுத்த கணமே, அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து, நடுரோட்டிலேயே வைத்து அந்த காமுகனை மிருகத்தனமாக அடித்துத் துவம்சம் செய்துள்ளார்.
"Shocking: A man harassing women in the busy market until one brave guy secretly recorded him red-handed and beat him mercilessly on the spot.
Women, where are you truly safe today? pic.twitter.com/iq4czslMCm
— 𝗠𝗮𝗿𝗶𝘆𝗮𝗺_𝗠𝗕𝗗 (@Mariyam_MBD) June 18, 2026
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ தற்போது எக்ஸ் (X) வலைதளத்தில் வெளியாகி, “பெண்களுக்குப் பொது இடங்களில் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என்ற விவாதத்தை ஏற்படுத்தியதோடு, அந்த காமுகனை அடித்து துவம்சம் செய்த இளைஞருக்கு நெட்டிசன்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
