உள்ளூர் கோயில் ஒன்றில் சிவலிங்கத்திற்குப் பால் அபிஷேகம் செய்த ஒரு நபர், அந்தப் பால் வீணாகச் சாக்கடைக்குச் செல்வதைத் தடுக்க மிகவும் அக்கறையுடன் ஒரு கிண்ணத்தை வைத்து அதனைச் சேகரித்தார். வழிபாடு முடிந்ததும், அந்தப் பாலை கோயிலுக்கு வெளியே பசியுடன் காத்திருந்த தெரு நாய் ஒன்றுக்கு ஊட்டி மகிழ்ந்தார். இறைவனுக்குச் செய்யும் பூஜையை விட, ஒரு ஜீவனின் பசியைத் தீர்ப்பதே உண்மையான பக்தி என்பதைச் செயல் மூலம் காட்டியுள்ளார் இந்த நபர்.

​இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. “உண்மையான ஆன்மீகம் என்பது சக உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே” என்று பலரும் இந்த நபரின் செயலைப் பாராட்டி வருகின்றனர். பக்தி மற்றும் மனிதாபிமானத்தின் சங்கமமாகத் திகழும் இந்த நெகிழ்ச்சியானக் காட்சி, இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.