தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், குறிப்பாகச் சென்னையிலும் இரவு நேரங்களில் நிலவி வரும் மிகக் கடுமையான மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத் தூக்கம் கலைந்து மக்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதோடு, பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டும், வீதிகளில் இறங்கியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மின்வாரியத்துறை தலைவர் ராதாகிருஷ்ணன், இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவது உண்மைதான் என ஓப்பனாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இது மின் உற்பத்திப் பற்றாக்குறை அல்ல என்றும், இரவு நேரத்தில் திடீரென ஏசி போன்ற சாதனங்களால் மின்சாரத் தேவை அதிகரிப்பதால் உள்ளூர் மின்மாற்றிகள் மற்றும் கம்பிகளில் ஏற்படும் கூடுதல் சுமையே காரணம் என்றும் விளக்கமளித்துள்ளார்.

இந்த உள்ளூர் உள்கட்டமைப்பு அழுத்தத்தைச் சீர்செய்து, விரைவில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.