உத்தராகண்டின் புனிதத் தலங்களான கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி தாமில், பக்தி என்ற பெயரில் டன் கணக்கில் புடவைகள் மற்றும் துணிகள் ஆற்றில் வீசப்பட்டு மிதக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி, ஒட்டுமொத்த நாட்டையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

சிவனின் ஜடாமுடியிலிருந்து பூமிக்கு வந்த கங்கை மற்றும் எமனின் சகோதரியான யமுனையைப் புனிதமாகக் கும்பிட்டுவிட்டு, அதே ஆற்றில் குப்பைகளை அள்ளி வீசும் இந்த விபரீத முரண்பாட்டுக்கு எதிராகப் பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் உள்ளிட்ட பலரும் “இதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்” எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

<a href="http://

“>

2026 ஏப்ரல் முதல் நவம்பர் வரை நடக்கும் இந்த புனித யாத்திரையில், ஆன்மீகத்தோடு சேர்த்து மக்களுக்குக் குறைந்தபட்ச ‘சிவிக் சென்ஸ்’ சமூக ஒழுக்கம் சொல்லித் தரப்பட வேண்டும்
என்றும், இயற்கை அன்னைக்குத் துரோகம் செய்பவர்களைக் கடவுள் வெள்ளத்தின் மூலம்தான் தண்டிப்பார் என்றும் நெட்டிசன்கள் தங்களின் குமுறல்களை ஆவேசமாகப் பதிவு செய்து வருகின்றனர்