இந்தியச் சமையலறையில் பயன்படுத்தப்படும் இலவங்கப்பட்டை, வெந்தயம் மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று மசாலாப் பொருட்களும் சுவையைத் தருவதுடன், எண்ணற்ற மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த இந்த மூன்று பொருட்களின் கலவை, உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகச் செயல்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தக் கலவை ஒரு வரப்பிரசாதமாகும். இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க, வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது; மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த குளுக்கோஸ் அளவைச் சீராக வைக்கிறது. மேலும், இந்தக் கலவை செரிமான நொதிகளைத் தூண்டி வாயு, வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மூட்டு வலி, வீக்கம் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் இது பெரிதும் உதவுகிறது. மஞ்சளின் அழற்சி எதிர்ப்புப் பண்பு எலும்பு மற்றும் தசை வலிகளைக் குறைக்கிறது. வெந்தயம் பசியைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தர, இலவங்கப்பட்டை உடலில் உள்ள பிடிவாதமான கொழுப்பைக் கரைத்து வளர்சிதை மாற்றத்தை  அதிகரிக்கச் செய்கிறது.

அத்துடன், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி மாரடைப்பு போன்ற இதயப் பிரச்சனைகளில் இருந்தும் இது பாதுகாப்பு அளிக்கிறது. சம அளவு இலவங்கப்பட்டை, வெந்தயம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை அரைத்துப் பொடியாக்கி, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டி அளவு இளஞ்சூடான நீரில் கலந்து குடித்து வர முழுப் பலன்களையும் பெறலாம்.