இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஒரே இரவில் பிரபலம் அடைய வேண்டும் என்ற ஆசை இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காகப் பலரும் எல்லை மீறிச் சிந்தித்து, தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்கள். இந்த ‘ரீல்ஸ் மோகம்’ வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கினாலும், தற்போது பலரின் வாழ்க்கையை முடக்கும் அபாயகரமான ஒன்றாக மாறியுள்ளது.

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஒரு லாரியின் பின்புறத்தில் இரண்டு கயிறுகளைக் கட்டி, அதைத் தன் உடலில் பிணைத்துக் கொண்டு ஒரு இளைஞன் ஸ்கேட்டிங் செய்தபடி வேகமாகச் செல்கிறான். திடீரென எதிர்பாராதவிதமாக ஸ்கேட்டிங் சக்கரம் தட்டி அவன் கீழே விழ, அந்த கயிற்றோடு சேர்த்து லாரி அவனைச் சாலையில் இழுத்துச் செல்லும் கொடூரக் காட்சி பதிவாகியுள்ளது. நொடிப் பொழுதில் எடுத்த இந்த ஆபத்தான முடிவால் அந்த இளைஞனின் உயிருக்கே பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

இப்படி ரயிலில் ஸ்டண்ட் செய்வது, லாரியில் கயிறு கட்டி ஸ்கேட்டிங் செய்வது, உயரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுப்பது எனப் பலரும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். நொடிப் பொழுதில் செய்யும் இதுபோன்ற முட்டாள்தனமான காரியங்களால், பல இளம் உயிர்கள் பரிதாபமாகப் பலியாகின்றன அல்லது வாழ்நாள் முழுதும் குணமடையாத காயங்களைச் சந்திக்கின்றன. இது அவர்களின் பெற்றோருக்கு ஆறாத் துயரத்தைத் தருகிறது.

“>

சில நொடிகள் வரும் கைதட்டல்களுக்காகவும், இணையத்தில் கிடைக்கும் போலிப் புகழுக்காகவும் சொந்த உயிரைப் பணயம் வைப்பது முற்றிலும் அறிவீனம். வாழ்க்கை மிகவும் மதிப்பற்றது; அதைச் சில லைக்ஸ்களுக்காக இழப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இளைஞர்கள் இந்த ஆபத்தான ரீல்ஸ் மோகத்தில் இருந்து வெளிவந்து, உயிரின் மதிப்பை உணர்ந்து பாதுகாப்பாகச் செயல்பட வேண்டும்.