இயற்கையின் விதிகளுக்கு மாறாக நடக்கும் சில விநோதமான சம்பவங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ இன்டர்நெட்டில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பொதுவாகப் பூச்சிகள் மற்றும் சிறு விலங்குகளை வேட்டையாடும் பாம்புகள், தவளைகளை எளிதில் இரையாக்கிக் கொள்வதே நாம் அறிந்த வழக்கமாகும்.
ये कलयुग है जनाब… यहाँ साँप मेंढक को नहीं,
बल्कि मेंढक ही साँप को निगलने लगा है। pic.twitter.com/Bp1TYQlqLc— नई सोच (@NayiSochHQ) August 1, 2026
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக ஒரு பெரிய அளவிலான தவளை சிறிய பாம்பு ஒன்றை தனது வாயால் பிடித்து மெல்ல மெல்ல முழுங்கும் காட்சி பலரையும் உறைந்துபோகச் செய்துள்ளது. அந்தச் சிறிய பாம்போ தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தொடர்ந்து துடித்துப் போராடியும், அந்தத் தவளை தனது பிடியைக் கொஞ்சமும் தளர்த்தாமல் அதை அப்படியே வயிற்றுக்குள் தள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இந்த விசித்திரமான மற்றும் நம்ப முடியாத சம்பவத்தை வியப்புடன் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், இயற்கையின் நியதியை எப்போதுமே கணிக்க முடியாது என்பதை இது மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்துள்ள இந்தச் சம்பவம், வனவிலங்குகளின் உலகின் விநோதங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
