உத்தரப் பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஒரு தனியர் பயிற்சி மையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு பயிலும் மாணவி ஒருவருக்கு அதே பயிற்சி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
வகுப்பு நடக்கும் நேரத்திலும், வகுப்பு முடிந்த பிறகும் அந்த ஆசிரியர் தனக்குத் தொல்லை தருவதாக அந்த மாணவி தனது குடும்பத்தினரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அந்தப் பயிற்சி மையத்திற்கு நேரில் சென்றுள்ளனர்.
அங்கு வைத்து அந்த ஆசிரியர் செய்த அத்துமீறல் குறித்துக் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவியும் அவரது உறவினர்களும், அந்த ஆசிரியரைச் செருப்பாலும் கையாலும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
🆘️🚨 Student beats teacher with slippers over harassment allegations, video goes viral…
A video from a coaching centre in Sewrahi town of Kushinagar is rapidly going viral on social media.
It is alleged that the teacher at the coaching centre used to harass the student… pic.twitter.com/PCFgfnotll
— Mr Tiwaree 💀 (@MrTiwaree) August 3, 2026
“>
இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சேவ்ராஹி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
