சமூக வலைதளங்களில் தங்களை பிரபலமாக காட்டிக்கொள்ள விரும்பும் சில ‘இன்ஃபுளுயன்சர்கள்’, ஏழை எளிய மக்களின் வறுமையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தெருவோரக் கடை வைத்திருப்பவர்களின் குழந்தைகளை அழைத்து, அவர்களுக்கு கேமரா முன்னால் எப்படி நடிக்க வேண்டும் என்று ஸ்கிரிப்ட் சொல்லிக்கொடுத்து, பின்னர் இரண்டு ரொட்டிகளையும் ஒரு சிறு தொகையையும் கொடுத்து வீடியோ எடுத்து விளம்பரம் தேடுகின்றனர்.

​உண்மையான உதவியைச் செய்யாமல், கேமரா முன்னால் மட்டும் மனிதாபிமானம் இருப்பது போல இவர்கள் காட்டும் இந்த போலித்தனம் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. “உதவி செய்வது போல நடித்து பிஞ்சு குழந்தைகளின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள்” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது ஆவேசத்தைத் தெரிவித்து வருகின்றனர். விளம்பரத்திற்காக எதையும் செய்யும் இத்தகைய போக்கு மனிதாபிமானத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.