இணையத்தில் தற்போது காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியின் வீடியோ பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆடம்பர வாழ்க்கையை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த இளம் பெண் ஒருவரது வீடியோ முற்றிலும் மாறுபட்டுள்ளது. செங்கல் சுவர்கள் மற்றும் இடிந்து விழும் அபாயத்திலுள்ள மரக்கூரை கொண்ட ஒரு அறையில் நின்றபடி, “இதுதான் ஓடிப் போய் கல்யாணம் செய்துகொண்டதற்கான தண்டனை” என்று அவர் அந்த வீடியோவில் பேசுகிறார்.

​”ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டால் கஷ்டப்படத்தான் வேண்டும், வீட்டுக்குத் திரும்பினால் பெற்றோர் அடித்துக் கொன்றுவிடுவார்கள்” என்று அந்தப் பெண் கூறும் கருத்துகள், நெட்டிசன்களை இரு வேறு துருவங்களாகப் பிரித்துள்ளது. சிலர் அவர்களின் நிலைக்கு வருத்தப்பட்டாலும், பலரோ இது வெறும் ‘ரீல்ஸ்’ (Reels) செய்வதற்காக உருவாக்கப்பட்ட நாடகம் என்று கடுமையாகச் சாடியுள்ளனர்.

பெற்றோரையும், அவர்களின் வலியையும் யோசிக்காமல் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோ சுமார் 6 லட்சம் பார்வைகளைக் கடந்து, இணையத்தில் கருத்து மோதல்களை உருவாக்கி வருகிறது.