உலகில் தனிமை அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக ‘JB.com’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசித்திரமான பட்டியலில் துருக்கி நாடு முதலிடத்தில் உள்ளது. சுற்றிலும் மனிதர்கள், குடும்பத்தினர் எனப் பலருடன் சேர்ந்து வாழ்ந்தாலும், மனதளவில் தங்களைத் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வதே இந்தியர்கள் மத்தியில் இந்தத் தனிமை அதிகரிக்க முதன்மை காரணம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் மற்றவர்களுடன் குறைவாகப்பேசுவது, சமூக ஊடகங்களில் அதிக நேரம் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் பார்ப்பது, ஆன்லைன் கேமிங் போன்றவற்றில் தங்களை எப்போதும் மூழ்கடித்துக் கொள்வதுமே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் உலகிற்குள் மூழ்கி நிஜ உலக மனிதர்களைத் தவிர்க்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதை இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.