சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்கும் லைக்ஸ் வாங்குவதற்கும் இளைஞர்கள் பலர் தங்களது உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய பெரும் கவலையாக மாறியுள்ளது.
அந்த வகையில், ஓடும் ரயிலின் வாசலில் நின்றுகொண்டு பெண் ஒருவர் ஆபத்தான முறையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ எடுக்கும் அதிர்ச்சியூட்டும் காணொளி இணையத்தில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
எக்ஸ் (X) தளத்தில் ‘@ChapraZila’ என்ற கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ஓடும் ரயிலின் இரண்டு கைப்பிடிகளைப் பிடித்துக்கொண்டு அந்தப் பெண் வெளியில் தொங்கியபடி, “நான் ரயிலில் வீடியோ எடுத்தால் யாராவது கேட்பார்களா?” என்று சினிமா பாணியில் டயலாக் பேசுகிறார்.
ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் இந்த வீடியோவில், அந்தப் பெண் பத்திரமாக உள்ளே வந்துவிட்டாலும், அவர் காட்டிய அசாத்திய அலட்சியம் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது.
இந்தக் காணொளியைப் பார்த்த சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அந்தப் பெண்ணின் பொறுப்பற்ற செயலைக் கண்டு தங்களது கடுமையான கண்டனங்களையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்காலிகப் புகழுக்காகவும் சில லைக்குகளுக்காகவும் இவ்வளவு ஆபத்தான ஸ்டண்ட்களைச் செய்வது சற்றும் புத்திசாலித்தனம் இல்லை என்றும், ஒரு சிறு தவறு நடந்திருந்தால் கூட அது பெரிய உயிரிழப்பில் முடிந்திருக்கும் என்றும் நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர்.
ऐसे लोगों के साथ कुछ हो भी जाएगा तो फर्क नहीं पड़ेगा। pic.twitter.com/nrET98QhiJ
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) June 5, 2026
“>
ரயிலில் வீடியோ எடுப்பது தவறில்லை என்றாலும், பாதுகாப்பு விதிகளையும் தங்களது உயிரையும் மதிக்காமல் இப்படிச் சாகசம் என்ற பெயரில் முட்டாள்தனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
