தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவகாரத்து வழக்கு விவகாரம் மற்றும் அதன் பின்னால் உள்ள அரசியல் திருப்பங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஒரு வைரல் பதிவு தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சங்கீதா விவாகரத்து வழக்கைத் திடீரென வாபஸ் பெற்ற விவகாரம் தற்செயலானது அல்ல என்றும், அது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ஒரு அரசியல் சதுரங்க ஆட்டம் என்றும் அந்தப் பதிவில் வர்ணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சங்கீதா விவாகரத்து கொடுக்கச் சம்மதித்திருந்தால் முதல்வர் விஜய் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட நகர்வுகளில் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்க முடியும் என்றும், ஆனால் இந்தத் திடீர் திருப்பத்தால் அவர் நினைத்ததைச் செய்ய முடியாத ஒரு முடக்கப்பட்ட சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சங்கீதா அரசியலுக்கு வராதது தமக்கு நிம்மதி அளித்ததாகக் குறிப்பிட்ட நபர், இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது அவர் சாதாரணமானவர் அல்ல என்றும், அரசியல் தந்திரங்களில் மிகப்பெரிய ‘கிராண்ட்மாஸ்டராக’ச் செயல்பட்டுள்ளதாகவும் வியந்து பதிவிட்டுள்ளார். தான் இந்தத் ட்வீட்டை கடந்த ஆகஸ்ட் 7, 2026 அன்றே எழுதி வைத்திருந்ததாகவும், இருவரும் சமரசம் அடைந்து ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று நினைத்துத் தாமதப்படுத்தியதாகவும், ஆனால் இன்றைய நிகழ்வுகள் தனது கணிப்பு நூற்றுக்கு நூறு சரி என்பதை நிரூபித்துள்ளதாகவும் அந்த நெட்டிசன் குறிப்பிட்டுள்ளார்.

“>

 

திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சமூக வலைதளப் பதிவின் மூலம், முதல்வர் விஜய்யின் குடும்ப விவகாரங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.