சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் ஒரு வாக்கிற்கு ரூ.8,000 வீதம் பணம் கொடுக்கப்பட்டதாகவும், அதனைப் பெற்றுக் கொண்டு மக்கள் துரோகம் இழைத்துவிட்டதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு கருத்து தற்போது பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் தலா 8,000 ரூபாய் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலை மையமாகக் கொண்டு, ஒரு லட்சம் வாக்குகளுக்கு மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கும் என்றும், ஒரு தொகுதியிலேயே இவ்வளவு செலவு செய்யப்பட்டால் 234 தொகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் பணம் வாரி இறைக்கப்பட்டிருக்கும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட சொத்துகள் மற்றும் கொட்டப்பட்ட பணத்தின் மூலம் ஜனநாயக விலைக்கு வாங்கப்படுவதாகவும், இது குறித்துத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தீவிர விசாரணை நடத்திச் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பணத்தை அள்ளி இறைத்து மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் போக்கைச் சுட்டிக்காட்டி, பேரறிஞர் அண்ணா மற்றும் காளிமுத்துவின் பொன்மொழிகளைக் குறிப்பிட்டுத் தற்போதைய அரசியல் சூழல் கடுமையாகச் சாடப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலின்போது, கொளத்தூரில் ஒரு வாக்குக்கு 8000 ரூபாய் கொடுத்தோம்; அதை வாங்கிக் கொண்டு பொதுமக்கள் ஸ்டாலின் அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள் என்று பேசுகிறார் ஆர்.எஸ் பாரதி.
அப்பா ஸ்டாலின் இடம் பத்தாயிரம் தான் இருக்கிறது என்று தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்… pic.twitter.com/kFSN0d2Jqx
— SivaPriyan Sembiyan (@SivaSembian) August 15, 2026
“>
தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
