தமிழக முதல்வர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய பேச்சு நாகரிகமற்றது மற்றும் அவதூறானது என்று கண்டித்துள்ள அமைச்சர் ராஜமோகன், அதற்கு உரிய பதிலடியைக் கொடுத்துள்ளார்.

ஒரு கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பில் இருப்பவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும், ஆனால் நயினார் நாகேந்திரன் ஒரு தெருவில் பேசுபவரைப் போல் தரம் தாழ்ந்து பேசியுள்ளதாகவும் அமைச்சர் ராஜமோகன் கடுமையாகச் சாடியுள்ளார். பொதுவெளியில் கருத்துகளைப் பதிவு செய்யும் போது அதற்கேற்ற கண்ணியத்தையும், நாகரிகத்தையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், வகிக்கும் பதிவிக்குத் தகுந்தபடி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதுபோன்ற அவதூறுகளும் நாகரிகமற்ற தாக்குதல்களும் ஆயிரம் முறை வந்தாலும், தமக்கு வழிகாட்டியான முதல்வர் விஜய் கற்றுக் கொடுத்த பண்பாட்டின்படி நாகரிகமான அரசியலையே தொடர்ந்து முன்னெடுப்போம் என்று அமைச்சர் ராஜமோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“>

 

அரசியல் களத்தில் தலைவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த வார்த்தைப் போர் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.