காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், அப்பகுதிச் சாலைக்கு ‘தளபதி விஜய் சாலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஏகனாபுரம் கிராம மக்கள் கலந்துகொண்ட கிராம சபைக் கூட்டத்தில், ஊருக்குள் செல்லும் ஒரு முக்கிய சாலைக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் திரைப்பட நடிகரான ‘தளபதி விஜய்’ அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிராம மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த நாமகரணம் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானமும் இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
BREAKING:
A road in Ekanapuram village has been named “Thalapathy Vijay Road.”
Residents of the village have passed a resolution thanking the Tamil Nadu @CMOTamilnadu for deciding to hold the Parandur Airport project.
The resolution to name the road was passed unanimously at… pic.twitter.com/DFHUbnJvP3
— Arun Vijay (@AVinthehousee) August 15, 2026
“>
விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களின் மையமாகத் திகழ்ந்த ஏகனாபுரம் கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிரடி நிகழ்வுகள் அரசியல் மற்றும் ஊடக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
