இந்தியத் திருமணங்கள் என்றாலே சாப்பாடு மற்றும் பிரம்மாண்டத்திற்குப் பெயர் பெற்றவை. பொதுவாகத் திருமணங்களில் வொயிட்டர்கள் இனிப்புகள் அல்லது ஸ்டார்ட்டர்ஸ் உணவுகளைத் தாங்கிய தட்டுகளுடன் வலம் வருவார்கள். ஆனால், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வொயிட்டர் ஒருவர் கபாப் அல்லது பன்னீர் டிக்காவிற்குப் பதிலாக பிடி, சிகரெட் மற்றும் குட்கா பாக்கெட்டுகளைத் தட்டில் வைத்து விருந்தினர்களுக்கு விநியோகிக்கும் விசித்திரமான காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவைப் பதிவு செய்த பெண், “ஒரு திருமணத்திற்கு வந்த இடத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன்” என வியப்புடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், ஹரியானா மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளில் இது போன்ற பழக்கவழக்கங்கள் இன்னும் நடைமுறையில் இருப்பதாகச் சில பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
