காய்கறிச் சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகில் நின்றிருந்த சிறுமியை, அங்கிருந்த ஒரு இளம்பெண் மிகவும் தந்திரமாகத் திருடத் திட்டமிட்டார். மக்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி, யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது கையில் வைத்திருந்த சிறிய கத்தரிக்கோலால் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியை லாவகமாக அறுத்துத் திருடிக்கொண்டு, சத்தமில்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

​இந்தச் சம்பவம் முழுமையாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “குழந்தைகளுக்கு விலை உயர்ந்த நகைகளை அணிவித்து பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு ஆபத்தானது” என்பதை இந்த வீடியோ நமக்கு எச்சரிக்கையாக உணர்த்துகிறது. பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.