கேரளாவில் சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ஒரு சிறு குழந்தை திடீரென இறங்கி, யாருடைய துணையும் இல்லாமல் சாலையை நோக்கி ஓடத் தொடங்கியது. இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், விபரீதத்தைப் புரிந்துகொண்டு மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று குழந்தையைச் சாலைக்குச் செல்ல விடாமல் பிடித்துக் காப்பாற்றினார்.
கேரளாவில் காரில் இருந்து இறங்கி சாலையில் ஓடிய குழந்தை: நொடியில் பொழுதில் குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்#kerala #Child #viralvideo #DinakaranNews https://t.co/5rM99flCKL pic.twitter.com/I9EkvMZVpQ
— Dinakaran (@DinakaranNews) February 11, 2026
அந்தச் சமயத்தில் சாலையில் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருந்ததால், இளைஞரின் இந்தத் துரிதமான செயல் ஒரு பெரும் விபத்தைத் தடுத்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அந்த இளைஞரின் அசாத்தியமான வேகத்தையும் சமயோசித புத்தியையும் பாராட்டிப் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
