உத்தரப் பிரதேசத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையத்தில், ஒரு நபர் அசுத்தமான தண்ணீரைக் கொண்டு பிராண்டட் மினரல் வாட்டர் பாட்டில்களை நிரப்பி விற்பனை செய்தது வீடியோவாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நபர் ரயில் நிலையத்தின் சுகாதாரமற்ற குடிநீர் நிலையக் குழாயில் பாட்டில்களை நிரப்பிக் கொண்டிருந்தார். அவர் நிரப்பப்பட்ட பாட்டில்களை எடுத்துக்கொண்டு உடனடியாக ரயிலை நோக்கி ஓடுகிறார். இந்தப் போலியான தண்ணீரைக் குடிப்பதால் பயணிகளின் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
View this post on Instagram
இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களும் சமூக வலைதளப் பயனர்களும் ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, மோசடி செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
