சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சுமார் 7.2 அடி உயரமுள்ள இந்திய இளைஞரைக் கண்டு நைஜீரிய நாட்டுப் பெண்கள் மிகுந்த ஆச்சரியமடைவது பதிவாகியுள்ளது. ‘தி பிக்மேன்’ என்று அழைக்கப்படும் ஹிமான்ஷு சின்ஹா என்ற இந்த உயரமான இந்தியக் கலைஞர், நைஜீரியப் பெண்களைச் சந்தித்தபோது அவர்கள் அவரை அண்ணாந்து பார்த்து வியந்து நின்றனர்.

இதுவரை இவ்வளவு உயரமான மனிதரை நேரில் பார்த்திராத அந்தப் பெண்கள், தொடக்கத்தில் அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் ஆர்வத்துடன் அவருடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. 7 அடி 2 அங்குல உயரம் கொண்ட ஹிமான்ஷு, தான் செல்லும் இடமெல்லாம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by HIMANSHU SINHA (@the_bigman__)

“>

இந்நிலையில் நைஜீரியப் பெண்களுடன் அவர் இருக்கும் வீடியோவில், அவருக்கு அருகில் நிற்கும் பெண்கள் மிகச் சிறியவர்களாகக் காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. “இந்தியர்கள் என்னை அறிவார்கள், இப்போது நைஜீரியர்களும் என்னை அடையாளம் கண்டுவிட்டனர்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, உலகளவில் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.