சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், ஒரு சிறிய பாம்பு தனது தலையை விட பல மடங்கு பெரிய முட்டையை முழுவதுமாக விழுங்கும் அபூர்வக் காட்சி பதிவாகியுள்ளது. பொதுவாகப் பாம்புகள் எலிகள் மற்றும் பறவைகளை வேட்டையாடும் என்றாலும், ‘முட்டை உண்ணும் பாம்புகள்’ எனப்படும்.

இந்த வகை பாம்புகள் பறவைகளின் முட்டைகளை மட்டுமே உணவாகக் கொள்கின்றன. இந்த வீடியோவில், அந்தப் பாம்பு மெதுவாகத் தனது தாடையை விரித்து முட்டையை முழுமையாக விழுங்குவதையும், அதன் பிறகு முட்டையின் உள்ளே இருக்கும் திரவத்தை மட்டும் உட்கொண்டு வெறும் ஓட்டை மட்டும் வெளியே துப்புவதையும் காண முடிகிறது.

“>

இந்த வகை பாம்புகள் விஷமற்றவை மற்றும் இந்தியா முதல் ஆப்பிரிக்கா வரை பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இவற்றின் தாடைகள் மிகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டவை என்பதால், தங்களை விடப் பெரிய அளவிலான முட்டைகளையும் இவற்றால் எளிதாக விழுங்க முடிகிறது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த 25 வினாடி வீடியோ, இயற்கையின் விந்தையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதால் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்து வைரலாகி வருகிறது. முட்டையைச் சாப்பிட்ட பிறகு அதன் ஓட்டை மட்டும் அந்தப் பாம்பு வெளியேற்றும் விதம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.