அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் ஷாம்புவின் பிறப்பிடம் இந்தியா என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், வெளிநாட்டவர் ஒருவர் வழிப்போக்கர்களிடம் “ஷாம்பு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது?” என்ற கேள்வியைக் கேட்கிறார்.
மேலும் பலரால் இதற்குச் சரியான பதிலைக் கூற முடியாத நிலையில், இறுதியில் ஒரு காவல்துறை அதிகாரியும், இந்தியப் பெண் ஒருவரும் இது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்று சரியாகப் பதிலளிக்கின்றனர். இந்தத் தகவல் இந்தியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
உண்மையில், ஷாம்பு என்ற சொல் ‘சம்போ’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதாகும், இதற்கு ‘மசாஜ் செய்தல்’ அல்லது ‘அழுத்துதல்’ என்று பொருள். பண்டைய காலத்திலிருந்தே இந்தியாவில் சீயக்காய், நெல்லிக்காய் மற்றும் பூந்திக்கொட்டை போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு தலைமுடியைச் சுத்தம் செய்யும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
பிற்காலத்தில் 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் இந்த முறையை இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்டு, அதை நவீன வடிவிலான ஷாம்புவாக மாற்றினர். இந்தியாவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவது நம் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும்.
