இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாகத் தனியாகப் பயணம் செய்து வரும் ஹன்னா என்ற ஜப்பானியப் பெண் பயணி, தான் சந்தித்த அனுபவங்களின் அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் வாரணாசி முதலிடத்திலும், பீகாரின் ரக்சால் இரண்டாவது இடத்திலும், மும்பை மூன்றாவது இடத்திலும் உள்ளன. டெல்லி நான்காவது இடத்திலும், அசாமின் குவஹாத்தி ஐந்தாவது இடத்திலும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாரணாசியில் தன்னைச் சிலர் பின்தொடர்ந்ததாகவும், மும்பையில் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மேலும், ரக்சாலில் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் அலைந்ததும், டெல்லியின் காலநிலை ஒத்துப்போகாததும் தமக்கு மன அழுத்தத்தைத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்தியப் பயனர்கள் பலரும் அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மும்பை மற்றும் குவஹாத்தியைச் சேர்ந்தவர்கள் ஹன்னாவுக்கு நேர்ந்த நிகழ்வுகளுக்காக வெட்கப்படுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Hanna Japanna🇯🇵🎀 (@hanna_japanna)

“>

பெண்கள் பாதுகாப்பாக உணரும் தென்னிந்தியா அல்லது வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மிசோரம் போன்ற இடங்களுக்குச் செல்லுமாறு நெட்டிசன்கள் அவருக்குப் பரிந்துரை செய்துள்ளனர். பயணங்களில் அழகும் சிரமங்களும் கலந்தே இருக்கும் என்பதை ஏற்றுக்கொண்ட ஹன்னா, இந்த அனுபவங்கள் தனது பயணத்தின் ஒரு பகுதிதான் என்று நேர்மறையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.