கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இதனால் கல்பனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் சளி அதிகமாகி மூச்சு திணறல் ஏற்பட்டதால் கல்பனாவை அக்கம் பக்கத்தினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கல்பனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.