சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதாவது வயது மூப்பு காரணமாக பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்காததால் காதலர்கள் பிரிந்து விட்டனர். இதற்கிடையில் ரக்ஷனாவின் பெற்றோரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு குடும்ப பிரச்சனை, காதல் தோல்வி என மனமுடைந்து காணப்பட்ட ரக்ஷனா கோபத்தில் அவரது தாயாரை திட்டி உள்ளார். மேலும் ரக்ஷனா திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ஏற்கனவே ரக்ஷனா காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் தோல்வியால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
