தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் கூட தமிழகத்தின் தலைமைச் செயலாளர் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க whatsapp எண்ணை கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும் எனவும் அதனுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இணையதள முகவரியையும் இணைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இருப்பினும் சில அலுவலகங்களில் இன்னும் லஞ்சம் வாங்கும் முறை இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக வந்த இளைஞரிடம் a4 சீட் பண்டல் வாங்கி வருமாறு வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.

 

ஆனால் அதற்கு அந்த வாலிபர் என்னிடம் 100 ரூபாய் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் பேப்பர் இல்லை என்று அவர் கூறிய நிலையில் அந்த 100 ரூபாயை அங்கிருந்து அதிகாரிகள் வாங்கிக் கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.