குழந்தைகள் மூச்சு விடும்போது ஏற்படும் ஒருவித விசித்திரமான ஓசை மற்றும் ‘லரிங்கோ மலேசியா’ என்ற மருத்துவக் குறைபாடு குறித்துப் பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கும் வகையில், பிரபல குழந்தை மருத்துவர் விழிப்புணர்வு விளக்கங்களையும் உணவு முறைகளையும் பகிர்ந்துள்ளார்.

பொதுவாக ‘மலேசியா’ மற்றும் ‘கொலாலம்பூர்’ என்ற இடங்களைப் பற்றிய கேள்விகள் நமக்கு, ‘லரிங்கோ மலேசியா’ என்ற வார்த்தை சற்றுப் புதியதாகவும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். இதுகுறித்து விளக்கிய டாக்டர், ஆங்கில மருத்துவ நோய்களுக்கும் மருத்துவக் கண்டிஷன்ஸ்க்கும் அழகான பெயர்கள் மற்றும் அர்த்தங்கள் ஒளிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் பேசக்கூடிய ஓசை வரக்கூடிய தொண்டைப் பகுதியை, அதாவது குரல்வளையை ஆங்கிலத்தில் ‘லெரிங்ஸ்’ அல்லது ‘வாய்ஸ் பாக்ஸ்’ என்று‌ அழைப்பார்கள். அந்த லேரிங்ஸ் மென்மையாக இருந்தால், அதற்கு மருத்துவ மொழியில் ‘மலேசியா’ என்று அர்த்தம்.

இதைப் பற்றி பேசிய டாக்டர், “இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் நான் முதலில் ஒரு தெளிவை வழங்க விரும்புகிறேன். லாரிங்கோ மலேசியா என்பது ஒரு பெரிய பிரச்சனையே கிடையாது. இது நிறை மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வரலாம், குறை மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு வரலாம்.‌

மேலும், இந்தக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மூச்சு விடும்போது ஒருவிதமான விசித்திர சத்தம் கேட்கும் என்றும், காற்று உள்ளே செல்லக்கூடிய சமயத்தில் தொண்டைப் பகுதி இன்னும் முழுமையாக வளர்ச்சி அடையாத காரணத்தினால் மட்டுமே இந்த ஓசை ஏற்படுகிறது, இது முற்றிலும் சாதாரணமானது என்பதால் பெற்றோர்கள் எக்காரணத்தைக் கொண்டு பயப்பட வேண்டிய அவசியமே இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.

இதற்கிடையே, இக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுக்கலாம் என்று தாய்மார்கள் எழுப்பிய கவலைக்கு பதிலளித்த டாக்டர் , “இதற்காக நீங்கள் ஸ்பெஷலாக எந்த உணவும் கொடுக்க வேண்டியதில்லை. குழந்தைகளின் ஆரோக்கியமான டயட் மற்றும் போதும். இக்குறைபாடு சிம்பிளாகக் குணமாகிவிடும்” என்று டாக்டர் தெளிவுபடுத்தியுள்ளார்.