உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாம் நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை 13 வயது சிறுவன் ஒருவன் தனது துணிச்சலான செயலின் மூலம் ஈர்த்துள்ளான்.
எட்டாம் வகுப்பு படிக்கும் அமிதாப் என்ற அந்தச் சிறுவன், கலெக்டர் அஞ்சனி குமார் சிங்கிடம் நேரில் சென்று, தனது தந்தை வழி பெரியப்பா வீட்டைப் பூட்டிவிட்டதாகக் கூறி நீதிக்காகக் கோரிக்கை விடுத்தான்.
சிறுவனின் தெளிவான பேச்சு மற்றும் தன்னம்பிக்கையைக் கண்டு வியந்த கலெக்டர், உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். ஆனால், விசாரணையில் இந்த விவகாரத்தின் பின்னணியில் பல சிக்கலான குடும்பப் பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தது. சிறுவனின் தந்தை இரண்டு திருமணம் செய்தவர் என்பது தெரியவந்துள்ளது.
வீட்டின் ஒரு பகுதி, முதல் மனைவிக்கு பிறந்த மகனுக்குச் சொந்தமானது என்றும், தற்போது பூட்டப்பட்ட அறை அந்தச் சிறுவனுக்கு உரியது என்றும் கண்டறியப்பட்டது. மேலும், சிறுவனின் தந்தை மனநலம் குன்றியவர் என்பதும், குடும்ப உறுப்பினர்களிடையே நீண்டகாலமாகச் சொத்துப் பிரச்சினை நிலவி வருவதும் விசாரணையில் அம்பலமானது.
சிறுவனின் தாய் கூறுகையில், “அவன் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊர் சுற்றி வருகிறான். டி.சி வாங்கப் போவதாகச் சொல்லிவிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்திருக்கிறான்,” என்று தெரிவித்துள்ளார்.
तहसील दिवस में डीएम और बच्चे की बात सुने ।
ज़िला लखीमपुर खीरी । pic.twitter.com/aH80XvfqoI— Abhinav_bebaak (@abhinavBebaak) July 18, 2026
“>
ஆனாலும், குடும்பப் பிரச்சினையாலும், பெற்றோரின் நிலையாலும் சிறுவனின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. அவனது கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குக் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சிறுவனின் தைரியமான புகார், தற்போது அந்த குடும்பத்தின் நீண்டகாலப் பிரச்சினையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
