திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் எனும் பகுதியில் சாத்தனூர் அணை இருக்கின்றது. இங்குள்ள நீர்பிடிப்பு பகுதியில் முனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றுள்ளார்.

இதையடுத்து முனீஸ் நீர்பிடிப்பு பகுதியில் தன் முகத்தை கழுவுவதற்காக சென்ற நிலையில் அங்கு பதுங்கியிருந்த முதலை ஒன்று வாலிபரை தண்ணீருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கடித்து குதறியது. இதனால் முனீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில் நண்பர்கள் காப்பாற்ற முயற்சி செய்தும் முனீஸ் சடலமாகவே மீட்கப்பட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முனீசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.