உத்திர பிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் நடந்த ஒரு கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செய்த தவற்றுக்கு ஏதேனும் வருத்தப்படுகிறாயா?” என்று காவல்துறை அதிகாரிகள் கேட்டபோது, தாமினியிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை; வெறும் மௌனமே நிலவியது. அவர் தலையசைக்கவுமில்லை, எந்த விளக்கமும் அளிக்கவுமில்லை. இருப்பினும், பின்னர் நடைபெற்ற தீவிர விசாரணையின் போது, “எனக்கு அதுலுடன் வாழ விருப்பமில்லை, அவரிடமிருந்து விடுதலை பெறவே விரும்பினேன். அவர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்” என தாமினி வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு காலத்தில் காதலித்து, கையில் ‘அதுலின் சொத்து’ என்று டாட்டூ குத்திக்கொள்ளும் அளவுக்கு நேசித்த கணவரையே, தற்போது கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் தாமினியை காவல்துறை கைது செய்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு அதுல் பன்வாரும் தாமினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இணைந்து ‘கிருஷ்ணா கிட்ஸ் பப்ளிக் ஸ்கூல்’ என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் ஹஸ்தினாபூரில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் இவர்களது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. பள்ளியில் வேன் டிரைவராகப் பணியாற்றிய துஷார் என்பவருடன் தாமினிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த தவறான உறவு மற்றும் அதுலின் பெயரில் இருந்த ரூ.20 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகைஆகியவையே இந்த கொடூரக் கொலைச் சதிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கணவரை வழியிலிருந்து முற்றிலுமாக அகற்ற தாமினி பல மாதங்களாகத் திட்டம் தீட்டி வந்துள்ளார். முதலில், 20 நாட்களுக்கு முன்பு அதுல் இருசக்கர வாகனத்தில் சென்றபோதுகாரைக் கொண்டு மோதி விபத்து போலக் கொல்ல முயற்சி செய்தனர். ஆனால், அதுல் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். முதல் முயற்சி தோற்றதால், தாமினி தனது திட்டத்தை மாற்றினார். இதற்காக இணையதளத்தில் மிகவும் கொடூரமான விஷப் பாம்புகளைப் பற்றி ஆய்வு செய்த தாமினி, ‘காரைஃட்’ வகை பாம்பைத் தேர்வு செய்தார். அதன் படத்தைப் பதிவிறக்கம் செய்து, டிரைவர் துஷாரிடம் கொடுத்து அதே வகை பாம்பைப் பிடித்து வருமாறு கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, துஷார் அந்தப் புகைப்படத்தை சோனு மற்றும் உதய் ஆகிய பாம்பு பிடி வீரர்களிடம் காட்டி, ரூ.15,000 முன்பணம் கொடுத்து பாம்பைப் பிடிக்குமாறு பணித்துள்ளார். சுமார் ஏழு நாட்கள் தேடுதலுக்குப் பிறகு, அவர்கள் அந்த விஷப் பாம்பைப் பிடித்து வந்து கொடுத்துள்ளனர். இந்தச் சதியில் மேலும் ஒரு பாம்பு பிடி வீரருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. தடையவியல் ஆதாரங்கள், செல்போன் அழைப்பு விவரங்கள் (மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
