மும்பை அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், பயணி ஒருவர் ரயிலின் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கிரில்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் மரணத்தின் விளிம்பில் இருந்த அந்தத் திகிலூட்டும் வீடியோவை, மற்றொரு ரயிலில் பயணித்த பயணியொருவர் படம் பிடித்துள்ளார்.

நடந்தது என்ன?

ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதே பாதையில் மற்றொரு ரயில் குறுக்கே வர, அந்த நபர் இரு ரயில்களுக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியில் சிக்கிக்கொண்டார். ரயிலுக்கு வெளியே தொங்கிக்கொண்டிருந்த அவர், தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த அடுத்த ரயிலில் சிக்கிவிடாமல் இருக்கப் போராடிய காட்சி காண்போரை உறைய வைத்தது.

இந்த ஆபத்தை உணர்ந்த அருகில் இருந்த பயணிகள், ரயிலுக்குள் ஏறி பாதுகாப்பாக வருமாறு கத்திக் எச்சரித்தும், அவர் அதை அலட்சியம் செய்தபடி தொடர்ந்து வெளிப்புறக் கம்பிகளிலேயே தொங்கியுள்ளார்.

ரயில் கடந்து சென்றபோது, அவர் பிடியிலிருந்து தவறி கீழே விழும் நிலைக்குச் சென்றார். அதிர்ஷ்டவசமாக, கடைசி நேரத்தில் தனது பிடியை இறுக்கிக் கொண்டு பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பினார்.

இணையத்தில் வெடித்த கண்டனங்கள்:

இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே பல லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது. “உயிரை விடவா இந்த ஆபத்தான பயணம் முக்கியம்?”, “ரயில் பயணத்தில் இவ்வளவு அலட்சியமா?” என்று நெட்டிசன்கள் அந்த நபரை கடுமையாகச் சாடியுள்ளனர்.

“>

 

ஒரு சிறிய தவறு நடந்திருந்தாலும் அது மிகப்பெரிய உயிரிழப்பில் முடிந்திருக்கும் என்று எச்சரிக்கும் பயணிகள், ரயில் நிலையங்களில் இத்தகைய அத்துமீறல்களைத் தடுக்க நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளை உணர்த்தும் ஒரு பாடமாக இந்த வீடியோ தற்போது பகிரப்பட்டு வருகிறது.