அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பியர்ஸ் கவுண்டியில் நிகழ்ந்த ஒரு அதிரடி போலீஸ் துரத்தலின் போது, ஒரு பெரிய நாய் கார் விண்ட்ஷீல்டு வழியாக வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 6-ம் தேதி அதிகாலை, காலாவதியான பதிவு எண்ணுடன் சென்ற ஒரு காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அதிவேகமாக இயக்கி தப்பியோடியுள்ளார். துரத்தலின் இறுதியில், ஒரு முட்டுச்சந்தில் நிலைதடுமாறி கார் விபத்துக்குள்ளானது.

அப்போது மோதிய வேகத்தில் காரின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே இருந்த நாய் வெளியே தூக்கி எறியப்பட்டது. ஆனால், வியக்கத்தக்க வகையில் அந்த நாய் தரையில் காலூன்றி பாதுகாப்பாக விழுந்து, எந்தக் காயமும் இன்றி தப்பித்து ஓடியது. இந்த விபத்திற்குப் பிறகு, காரை ஓட்டிய 39 வயது நபர் போதைப்பொருள் பயன்பாடு, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் விலங்கு வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.

“>

காரில் இருந்த உரிமையாளரான பெண்ணிடம் இரண்டு நாய்களும் ஒப்படைக்கப்பட்டன. நாய் காற்றில் பறந்து வந்து பத்திரமாகத் தரையிறங்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “ஜாக்கி சான் போல அந்த நாய் ஸ்டண்ட் செய்து உயிர் பிழைத்துவிட்டது” என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், செல்லப்பிராணிகளை காரில் அழைத்துச் செல்லும்போது முறையான பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.