வெறும் 50 செகண்டில் உயிர் போகும் நிலைக்குச் சென்ற ஒரு இன்ஃப்ளூயன்சரின் வீடியோ இணையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான கோல்டன் மெக்காலே (Colton Macaulay) என்ற இன்ஃப்ளூயன்சர், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சதுப்புநிலப் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு வெறும் லைக்ஸ்களுக்காக, ஆழமான ஒரு சதுப்புநிலச் சேறு குட்டைக்குள் திடீரெனக் குதித்தார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டே விளையாட்டாகத் தெரிந்த அந்தச் செயல், அடுத்த சில நொடிகளில் விபரீதமாக மாறியது.

அவர் குதித்த 50 வினாடிகளிலேயே சேறு அவரை வேகமாக உள்வாங்கத் தொடங்கியது. அவர் வெளியே வர முயற்சி செய்தும், சேறு அவரை இன்னும் ஆழமாக இழுத்தது.

கழுத்து வரை சேற்றில் சிக்கி மூச்சு விட முடியாமல் அவர் திணறிய காட்சி பார்ப்பவர்களின் ரத்தத்தை உறைய வைக்கிறது. அவரது நண்பர்கள் துரிதமாகச் செயல்பட்டு அவரை மீட்டதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

சுமார் 66 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ள இந்த வீடியோ, “வெறும் வியூஸ்களுக்காக இப்படியா உயிரோடு விளையாடுவது?” எனப் பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.