சமூக ஊடகங்களில் தற்போதைய ட்ரெண்டுகளுக்காகவும், வியூஸ்களுக்காகவும் இளைஞர்கள் பல்வேறு விதமான சோதனைகளையும் சோஷியல் மீடியா பரிசோதனைகளையும் செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் ஒரு யூடியூபர்/இளைஞர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பிருந்தாவனத்தில் ஒரு விசித்திரமான பரிசோதனையை மேற்கொண்டார்.
மேலும் ஒரு பிச்சைக்காரனைப் போல வேடமணிந்து, பிருந்தாவனத்தின் தெருக்களில் அமர்ந்து வெறும் 4 மணி நேரம் மட்டுமே பிச்சை எடுத்தார். ஆனால், அந்த 4 மணி நேரத்தின் முடிவில் தனக்குக் கிடைத்த வருமானத்தை எண்ணிப் பார்த்த அந்த இளைஞரே அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த குறுகிய நேரத்தில் அவர் கணிசமான தொகையைச் சம்பாதித்திருந்தார்.
4 घंटे वृन्दावन में भिखारी बना लड़का, कमाई गिनते ही रह गया हैरान, बेशर्मी से कमा ली इतनी लक्ष्मी! https://t.co/XtUbJx3qnj
“>
இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இரண்டு முக்கியக் கருத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. முதலாவதாக, சமூக ஊடகங்களின் செல்வாக்கு பெற்றவர்கள் எவ்வித சிந்தனையுமின்றி எதை வேண்டுமானாலும் தங்களின் ‘கண்டென்ட்’ ஆக மாற்றி வருவது சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இளைஞர்கள் மத்தியில் நிலவும் வேலையின்மை மற்றும் உழைக்காமல் மிக எளிதாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை அவர்களை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் என்பதை இது காட்டுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதோடு கடின உழைப்பைத் தவிர்த்து இதுபோன்ற குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிக்கலாம் என்ற தவறான செய்தியை இது இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் என்று ஒரு தரப்பினரும், இது பொதுமக்களின் தாராள மனப்பான்மையையும், கொடைத்தன்மையையும் காட்டுகிறது என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
