உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டின் சர்தானா பகுதியில், மதுபோதையில் இருந்த பெண் ஒருவர் நள்ளிரவில் சாலையில் பெரும் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப் பெண் மேலும் இரு ஆண்களுடன் சேர்ந்து வீதியில் தகராறு செய்வதாக உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த முயன்றனர்.

“>

ஆனால், கடும் போதையில் இருந்த அவர், போலீஸாரின் பேச்சைக் கேட்காமல் அவர்களிடமே தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமும் தவறாக நடந்துகொண்டதுடன், சிலரை அடிக்கவும் கை ஓங்கியுள்ளார்.

இதனால் போலீஸார் அவருடன் இருந்த இரு ஆண்களிடம் விசாரணை நடத்தியபோது, அந்தப் பெண் மேலும் ஆத்திரமடைந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி, அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட முயன்றார். எச்சரிக்கைகளை மீறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததால், போலீஸார் அந்தப் பெண் மற்றும் அவருடன் இருந்த இரு ஆண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் லிசாரி கேட் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண் மற்றும் சர்தானாவின் நானு மற்றும் மவானா பகுதிகளைச் சேர்ந்த இரு ஆண்கள் என மூன்று பேர் மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.