டெல்லியில் மாணவர் அமைப்புகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட தீவிர போராட்டங்களின் விளைவாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாணவர்களின் நலனுக்காகவும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொடர் போராட்டங்கள் மற்றும் உணவு விரதப் போராட்டங்களுக்கு இறுதியாக மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் முன்னணியில் நின்று, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர், போராட்டத்தின் வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
தர்மேந்திர பிரதமரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, மாணவர் அமைப்புகளும் காக்ரோச் ஜனதா கட்சியினரும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் ஒரு முக்கிய புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தியவாறு தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், போராட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் “நன்றி” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட இந்த டெல்லி போராட்டம் வெற்றி பெற்றிருப்பது, நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்புகளிடையே பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.
