பெங்களூருவில் உள்ள வெளிவட்டச் சாலையில் இயக்கப்பட்ட பி.எம்.டி.சி பேருந்தில் பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவரை, துணிச்சலான பெண் எதிர்த்துப் போராடியதுடன், பேருந்து ஓட்டுநர் சமயோசிதமாகச் செயல்பட்டு அந்த நபரைத் தيக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெப்பாலில் இருந்து மன்யாடா டெக் பார்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த 500டி எண் கொண்ட அரசுப் பேருந்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தில் பயணம் செய்த இளம் பெண் ஒருவருக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஆனால், எதைக் கண்டும் மிரண்டு போகாமல் அந்தப் பெண் உடனடியாக எதிர்த்து நின்று குரல் எழுப்பியுள்ளார்.

பெண்ணின் அலறலைக் கேட்டு உடனே விழித்துக்கொண்ட பேருந்து ஓட்டுநர் பிரவீன், உடனடியாக வண்டியை நடுவழியில் நிறுத்திவிட்டு அந்த நபரை நேருக்கு நேர் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் ஓட்டுநர் மீதே துப்பியதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் பிரவீன், அந்த ஆசாமியை நோக்கிப் பாய்ந்து சென்று பறக்கும் உதை ஒன்றை வழங்குயுள்ளார்.

பொதுப் போக்குவரத்துகளில் இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் மௌனம் காக்காமல் எதிர்த்துக் கேட்பதும், ஓட்டுநர்களைப் போன்ற பணியாளர்கள் துணிச்சலாக உதவுவதும் குற்றங்களைத் தடுக்க உதவும் என்பதற்கு இந்நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது.

“>

 

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விரைந்து வந்து தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.