திருவண்ணாமலை மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் 11 கிராம மக்கள், சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலுவின் கருத்துக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சைக் கண்டித்து விவசாயிகள் சாணிக் நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து, பின்னர் உருவப் பொம்மையைத் தீயிட்டு எரித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்கள் உழவு நிலங்களை மீட்கக் கோரி கடந்த 960 நாட்களுக்கும் மேலாகப் பகல் இரவாகப் போராடி வரும் விவசாயிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், செழிப்பான விவசாய பூமியைத் தரிசு நிலம் என்று அவர் பொய்யான தகவலைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவசாயிகளின் உரிமைக்காகத் தொடர்ந்து வழிகாட்டி வரும் செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் மீதான அவதூறுப் பேச்சுகளுக்கு எ.வ.வேலு சட்டமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் நியாயமான போராட்டத்திற்கு உடனடியாக ஆதரவுக் குரல் கொடுத்த அமைச்சர் ஆதவ அர்ஜுனா மற்றும் விசிக எம்.எல்.ஏ கணேஷ்குமார் ஆகியோருக்கு விவசாயிகள் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
*எ.வ. வேலுவின் உருவ பொம்மை எரித்து 11 கிராமத்தை* சார்ந்த விவசாயிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் எ.வ. வேலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேல்மா சிப்காட் திட்டத்தால் பாதிக்கப்படஉள்ள 11 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்று தங்களது கடும்… pic.twitter.com/oKoDulB9eb
— Arulmozhivarman (@arulmozhi_25) August 26, 2026
“>
மேல்மா சிப்காட் திட்டத்தைக் கைவிடுவதாகத் தமிழக அரசு உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் எனவும், மீதமுள்ள கிராமங்களிலும் எ.வ.வேலுவின் கருத்தைக் கண்டித்துத் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் எச்சரித்துள்ளது.
