தலைநகரான டெல்லியில், படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசுப் பேருந்தில் (Sleeper Bus) பயணம் செய்த இளம்பெண் ஒருவர், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 12-ஆம் தேதி இரவு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்திலேயே பணிபுரியும் ஊழியர்கள் இருவரும் அப்பெண்ணைத் தனிமையில் மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வியாழக்கிழமை (மே 14, 2026) வழக்குப் பதிவு செய்தனர்.
பெண்ணின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, துரிதமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், தலைமறைவாக முயன்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொகுசுப் பேருந்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதாவது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் சென்ற போது வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த பெண்ணை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு ரத்த வெள்ளத்தில் அந்த பெண்ணை வெளியே வீசிவிட்டு சென்ற நிலையில் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தினார்.
ஆனால் தன்னுடைய கணவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தனக்கு 8,6,4 வயதுடைய மூன்று மகள்கள் இருப்பதாகவும் கூடிய அந்த பெண் நான் மருத்துவமனையில் இருந்தால் அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள், உணவளிப்பார்கள் என்று கேட்டுவிட்டு வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமனை நிர்பையா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் டெல்லியில் மீண்டும் அதே போன்று ஓடும் பேருந்தில் பெண் பலத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
