சமூக வலைதளங்களில் ‘சாமர்த்தியமான ஐடியா’ அல்லது ‘உள்ளூர் கைத்திறன்’ தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். குறிப்பாக, பேச்சுலர்கள் போதிய சமையல் பாத்திரங்கள் இல்லாதபோது, இருக்கும் பொருட்களை வைத்தே சமாளிப்பார்கள்.
அந்த வகையில் ஒரு வீடியோவில், பூரி திரட்ட உருளைக்கட்டை இல்லாததால், ஒரு இளைஞர் பித்தளைச் செம்பைப் பயன்படுத்தி மிக அழகாக பூரி தேய்க்கிறார்.மாவின் உருண்டைகளை மரப்பலகையில் வைத்து, அந்தச் செம்பால் அழுத்தி வட்ட வடிவில் அவர் பூரி செய்வதைப் பார்த்து பலரும் வியந்து போயுள்ளனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
‘maximum_manthan’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், அந்த இளைஞர் செம்பைக் கொண்டு தேய்த்த பூரி, உருளைக்கட்டையில் செய்தது போலவே மிகத் துல்லியமாக இருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அந்த இளைஞரின் ‘சமயோசித புத்தியை’ பாராட்டி வருகின்றனர்.
“யாராலும் யோசிக்க முடியாத ஒரு எளிய தீர்வு” என்று பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வசதிகள் குறைவாக இருந்தாலும், புத்திசாலித்தனமாக வேலைகளை முடிக்கும் இது போன்ற வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகின்றன.
