திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  என் நெஞ்சம் நிறை குடும்ப உறவுகளே, மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை, அடி நாதமாக கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டிலேயே, மத்திய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட பல்வேறு அமைச்சர்கள், 400க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டின் சுற்றுப்பயணத்தை, மேற்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை அடையும் போது, பாரதத்தின் வளர்ச்சியும் விரைவுபடும். இணைப்புகள் கூட முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊடகமாக விளங்குகின்றன. இதனால் வியாபாரமும், வணிகமும் பெருகுவது மட்டுமல்ல, மக்களுக்கு வசதி வாய்ப்புகளும், ஏற்படுகின்றன. வளர்ச்சியின் இந்த உணர்வைதான், இன்று இங்கே திருச்சிராப்பள்ளியிலே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முணையம் காரணமாக, இந்த இடத்தை இணைப்பு திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். இங்கிருந்து, கிழக்காசியா, மத்திய ஆசியா, மேலும், உள்நாட்டின் உலக நாடுகளின் பிற  பாகங்கள் வரை திருச்சியில் இணைப்பில் அதன் திறன் மேலும் வலுவானதாக ஆகும். இதனால் திருச்சியை தவிர அண்டை புறத்தில் இருக்கும்  மிகப்பெரிய பகுதியிலே, முதலீடுகளும், புதிய வணிகத்திற்கான புதிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படும்.

இங்கே, கல்வி, உடல் நலம் மற்றும் சுற்றுலா துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு பலம் கூட்டப்படும். இங்கே விமான நிலையத்தின் திறன் அதிகரிப்பதோடு இதை உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும்….  உயர்த்தப்பட்ட சாலையாலும் கூட  மிகப்பெரிய வசதி உண்டாகும். திருச்சி விமான நிலையம், உள்ளூர் கலை, கலாச்சாரம், வாயிலாக தமிழ் பாரம்பரியம் பற்றிய பெருமைமிகு விஷயங்களை  உலகிற்கு பறைசாற்றும் என்பது  எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.