பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் மிகவும் பிரபலமானது. இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் பாமாயில் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாமாயில் பொருட்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் ஆரோக்கியமற்றது என்ற எண்ணம் இந்திய மக்களிடம் பெரும்பாலாக இருக்கிறது. இதன் காரணமாக லேஸ் சிப்ஸ் நிறுவனம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது உருளைக்கிழங்கு சிப்ஸ் இனி பாமாயில் எண்ணெய் பயன்படுத்தி தயாரிப்பதற்கு பதிலாக சூரியகாந்தி எண்ணெய் மூலம் தயாரிப்பதற்கு அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதோடு இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப்ஸ்களில் உப்பின் அளவையும் குறைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதேபோன்று வருகின்ற 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு கலோரிக்கு 1.3 மில்லிகிராமுக்கு மேல் சோடியம் இருக்கக் கூடாது என்றும் முடிவு செய்துள்ளனர். மேலும் பாமாயில் விலை குறைவு என்பதால் உணவுப் பொருட்கள் அதை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.